வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே நீச்சல் கற்றுக் கொடுத்தபோது, 2 குழந்தைகளுடன் கிணற்றில் மூழ்கி தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிச்சநத்தம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு பவித்ரா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் கோடை விடுமுறையையொட்டி பவித்ரா, தனது குழந்தைகளுக்கு அருகில் உள்ள விவசாய கிணற்றில் நீச்சல் கற்று கொடுத்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.