திருநெல்வேலி மாவட்டம், திடியூரில் பறவைகள் இடம் பெயர்வதைத் தடுக்கும் வகையில் மணிமுத்தாறு கால்வாயில் தண்ணீர் திறந்து விட கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திடியூர் கிராமத்திற்கு ஆஸ்திரேலியா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பறவைகள் வருகை தருகின்றன.
அவ்வாறு வருகை தரும் பிளம்பிங்கோ, ஹிரேஹரன், லிட்டில் இகிரேட் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் போதிய அளவு நீர் இல்லாததன் காரணமாக இடம் பெயர்ந்து வருகின்றன.
இதனைத் தடுக்கும் பொருட்டு மணிமுத்தாறு கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.