பீகாரில் மத்திய உள்துறை அமைச்சர் சென்ற ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறியதால் பரபரப்பு நிலவியது.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதனையடுத்து மத்திய அமைச்சர் அமித் ஷா சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பீகார் மாநிலம் பெகுசாராய் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தேசிய ஜனநாய கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார்.
பின்னர் பிரச்சாரத்தை முடித்து அவர் ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அப்போது, ஹெலிகாப்டர் மேலே செல்ல முடியாமல் அந்தரத்தில் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறியது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது ஆனால் சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் வானில் சீராக பறந்தது.