அற்புதங்கள் நிகழ்த்தும் மயிலை கபாலீஸ்வரர்!
Jan 16, 2026, 02:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அற்புதங்கள் நிகழ்த்தும் மயிலை கபாலீஸ்வரர்!

Murugesan M by Murugesan M
Apr 30, 2024, 06:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

என்ன தொழில் செய்தாலும் எதிர்பார்த்த லாபம் வரவேண்டும். அந்த லாபமும் ஆண்டுக்கு ஆண்டு வளர பன்மடங்கு வேண்டும். இப்படி ஆசைப்படும் அத்தனை பேருக்கும் அவர்கள் ஆசைகள் அத்தனையும் நிறைவேற ஒரு கோயில் இருக்கிறது என்று சொன்னால் அது எங்கே அன்று தானே கேட்பீர்கள் ? அந்த அற்புதமான கோயில் பற்றி தற்போது பார்க்கலாம்.

இந்தியாவில் இது ஸ்டார்ட் அப் காலம். புது புது தொழில்கள் வரத் தொடங்குகி உள்ளன.
விரைவில் ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

நாடு பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்றால் உள்நாட்டு உற்பத்திகள் பெருக வேண்டும். அதற்கு இளைஞர்கள் சுய தொழிலில் வெற்றிகரமாக செயல்படவேண்டும்.

அதை தான் சுயசார்பு பாரதம் என பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருகிறார். அதோடு மட்டும் இல்லாமல் இளைஞர்கள் சுயதொழில் செய்ய விஸ்வகர்மா திட்டம் போன்ற பல திட்டங்களையும் தந்திருக்கிறார்.

செய்யும் தொழிலை தொடர் வெற்றிக்களைக் குவிக்க செல்ல வேண்டிய ஒரு திருக்கோயில் இருக்கிறது.

சென்னை மயிலாப்பூரில் இருக்கும் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோயில். பிரசித்தி பெற்ற திருக்கோயில்கள் நிறைந்து விளங்கும் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள திருக்கோயில்களில் மிக முக்கியமானதும் முதன்மையானதுமான திருக்கோயில் தான் மயிலை கபாலீஸ்வரர் கோயில்.

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதியான சிவபெருமானுக்கும் ஐந்து தலைகள். ஊழி தோறும் பிறந்து படைக்கும் தொழிலை சிவபெருமான் ஆணை வழி செய்யும் பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள்.

‘அவனுக்கும் 5 தலைகள் எனக்கும் 5 தலைகள்’- எனவே சிவபெருமானுக்கு இணையானவன் நான் என்ற ஆணவம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது.

பிரம்மாவின் ஆணவத்தை அழிக்க முடிவு செய்த சிவபெருமான் அவனின் ஒரு தலையைப் பூவைக் கிள்ளுவது போல் கிள்ளி எடுத்தான்.

ஆணவத்தால் ஆடினால் இதுதான் கதி என்பதைப் பிறருக்கு உணர்த்த, தான் கிள்ளிய பிரம்மாவின் கபாலத்தைத் தன் கையில் ஏந்திக் கொண்டான். எனவே கபாலீஸ்வரன் இவன் ஆனான். இவனிருக்கும் இடம் கபாலீஸ்வரம் ஆனது.

சிவபெருமானிடம், அம்பிகை உபதேசம் கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில் மயில் ஒன்று தோகை விரித்து நடனமாட , அதன் அழகில் அம்பிகை மயங்கினாள். உபதேச நேரத்தில் சிவசிந்தனையிலிருந்து மாறு பட்டதால், விமோசனத்துக்காக அம்பிகை மயிலுருவில் புன்னை மரத்தடியில் சுவாமியை வழிபட்டு , இறைவன் அருள் பெற்றாள்.

மயில் உருவில் இறைவனை, இத்தலத்தில் பார்வதி பூஜை செய்ததால் இத்தலம் திருமயிலை எனப்படுகிறது. வேதங்கள் இத்தலத்தில் இறைவனை வழிபட்ட காரணத்தால் வேதபுரி என்று அழைக்கப் படுகிறது. சுக்கிரன் பூஜித்ததால் சுக்கிரபுரி என்றும் புகழப் படுகிறது.

ஐப்பசி மாதம் வரும் ஓணநாள் அன்று , ஸ்ரீ இராமபிரான் இங்கே இந்த தலத்தில் கபாலீஸ்வரருக்குப் பிரமோற்சவம் நடத்தி வழிபட்டிருக்கிறார். ஆனால் இப்போது பங்குனி மாதம் பிரமோற்சவம் நடக்கிறது. அந்த திருவிழாவின் போது நடக்கும் அறுபத்து மூவர் திருவீதியுலா மிகவும் சிறப்பு பெற்றது.

மேற்கு நோக்கி இருக்கும் இந்த கோயிலின் ராஜ கோபுரம் ஏழு நிலைகளுடன் கிழக்கில் அமைந்துள்ளது. ராஜ கோபுரம் வழி கோயிலின் உள்ள சென்றால் நேர் எதிரே நர்த்தன விநாயகர் இருக்கிறார்.

உண்ணாமுலை அம்மன் ,அண்ணாமலையார், சுந்தரேஸ்வரர் மற்றும் நவகிரக சன்னதி தரிசனம் முடித்து வலமாக வந்தால், சிங்காரவேலர் சன்னதி,பழனியாண்டவர் சன்னதி, வாயிலார் நாயனார் சன்னதி, அருணகிரி நாதர் சன்னதி, அங்கம் பூம்பாவை சன்னதிகள் அமைந்துள்ளன.

கொடிமரம் அருகே பலிபீடமும் அதற்கு முன்னால் நந்திஎம்பெருமான் சுவாமியைப் பார்த்த படி இருக்கிறார். சுவாமியின் கருவறை பிரகாரத்தில் நடராஜர், முருகன்,செல்வா விநாயகர்,தக்ஷணா மூர்த்தி சோமாஸ்கந்தர் சன்னதிகள் உள்ளன.

வடக்கு நோக்கி நின்ற நிலையில் தேடிவரும் பக்தர்களுக்கு அருள் புரிகிறாள் அன்னை கற்பகாம்பாள்.

வெளிப்பிரகாரத்தில் கோசாலைக்கு முன் புன்னை மரமும் , புன்னை மரத்தடியில் அம்பிகை மயிலாக சுவாமியை வழிபடும் ஆதிக் கபாலி கோயில் திகழ்கிறது.

இந்த திருக்கோயின் தீர்த்தமான கபாலி தீர்த்தம், வாலி தீர்த்தம் ,கங்கை தீர்த்தம், ராமன் தீர்த்தம், சுக்கிரன் தீர்த்தம், வேத தீர்த்தம் ,கடவுள் தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கே வந்து கபாலீஸ்வரரை வழிபட்டால் ,எந்த தொழில் செய்தாலும் அதில் நஷ்டம் வராது. அந்த தொழில் மேலும் மேலும் விருத்தி அடையும் என்றும், இன்றும் இதற்கான சான்றுகள் பல இருக்கின்றன என்கிறார்கள் பக்தர்கள்.

தொழில் மட்டும் இல்லை எந்த துறை என்றாலும் அந்த துறையில் உச்ச பதவியை அடைய வேண்டுமா ? அதற்கும் ஒரே பரிகார கோயில் இந்த கபாலி கோயில் தான்.

Tags: Miracle performing Peacock Kapaleeswarar!
ShareTweetSendShare
Previous Post

மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டையும் அனுமதிக்க மாட்டேன்! – பிரதமர் மோடி

Next Post

கிரிக்கெட்டா? பேஸ்பாலா? நீதி கேட்கும் பந்துவீச்சாளர்கள்!

Related News

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு- முதலிடம் பிடித்த பாலமுருகன்

தேனியில் பென்னிகுவிக் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாட்டம்

அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு ஊடகம் கொலை மிரட்டல்!

ரஷ்யாவில் 146 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இடைவிடாத பனிப்பொழிவு!

கன்றுகளுக்கு புற்கள் கொடுத்த பிரதமர் மோடி!

மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போர்களுக்கு தயாராகி வருகிறோம் – உபேந்திர திவேதி

ராணுவ தினம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து

“நாட்டை வழிநடத்தும் நிலைக்கு பெண்களின் பங்களிப்பு உயர்ந்துள்ளது”

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி!

ஜனநாயக கடைமை ஆற்றிய RSS தலைவர்!

இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் -பிரதமர் மோடி

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies