நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பிறகு நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமலாக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் எனக் கூறினார். மேலும், பாஜக வெற்றி பெற்ற பிறகு நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என அமித் ஷா தெரிவித்தார்.
ஜம்மு – காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வருவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறி வருவதாகவும், பாஜகவின் கடைசி தொண்டர் உயிருடன் இருக்கும் வரை அவர்களால் அதனைச் செய்ய முடியாது என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
மேலும், பீகார் மற்றும் ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி முடிவு கொண்டு வந்துள்ளதாகவும் அமித் ஷா கூறினார்.