சென்னை எண்ணூரில் இயங்கி வந்த கோரமண்டல் உரத் தொழிற்சாலை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 125 வது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
கடந்த டிசம்பரில் எண்ணூரில் கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிந்து வெளியேறியதில், சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இந்நிலையில் இத்தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, 125 வது நாளாக கண்டன முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், கையெழுத்து இயக்கத்தையும் நடத்தினர்.