தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே அடுத்தடுத்து இரு செவிலியர்களின் வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டிபட்டி அருகே உள்ள பிஸ்மி நகரில் அருகருகே இரு செவிலியர்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களது வீட்டின் கதவை களுக்குள் புகுந்த மர்ம நபர்கள், 3 கிராம் தங்கம், 3 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
அதற்கு அடுத்த வீட்டில் சுவர் ஏறி குதிக்கும்போது, வீட்டில் ஆள் இருந்ததால் தப்பி ஓடியுள்ளனர்.
அடுத்தடுத்து அரங்கேறிய திருட்டுச் சம்பவத்தால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.