தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சாலையோர கடைகளை அகற்றக் கூடாது என வலியுறுத்தி, வியாபாரிகள் ஊர்வலமாக சென்று மனு அளித்தனர்.
கோவில்பட்டியில் தற்காலிக ஆக்கிரமிப்புகளை மே 9-ம் தேதிக்குள் அகற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதனை எதிர்த்து கோவில்பட்டி மங்கள விநாயகர் கோவில் பகுதியில் இருந்து, சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை வழங்கினர்.