கரூர் மாவட்டம், குளித்தலையில் இருசக்கர வாகனம் திருடப்பட்ட வழக்கில் ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நச்சலூரைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர், கடந்த பத்தாம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி அருகேயுள்ள வடக்கு சேர்வை பட்டி கிராமத்திற்கு சென்றிருந்தார்.
அப்போது சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவரது இருசக்கர வாகனம் திருடப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்த வழக்கை விசாரித்து வந்த மணப்பாறை போலீசார்,
ஊர்க்காவல் படை வீரர் மணிகண்டனை கைது செய்து இருசக்கர வாகனத்தை மீட்டனர்.