மயிலாடுதுறையில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் பக்தர் சூலாயுதத்தை தோளில் சுமந்து நடனமாடிய காட்சி காண்போரை பரவசமடைய செய்தது.
குத்தாலம் அருகே வழுவூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கியது.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அப்போது வயதான பக்தர் ஒருவர் சூலாயுதத்தை தொளில் சுமந்தபடி நடனமாடிய காட்சி பக்தர்களை பரவசமடைய செய்தது.