ஈரோட்டில் கழிவுகள் அடங்கிய குழிக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது.
தொட்டம்பட்டியில் சங்கர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கழிவுகளை கொட்டும் குழி இருந்தது.
அதில் இருந்த கழிவுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்த நிலையில் ஒன்டிகாரன்பாளையம், தொட்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை புகைமூட்டம் சூழ்ந்தது.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர்.