கடந்த நிதியாண்டில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அதிக வருவாய் ஈட்டி முதலிடம் பிடித்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்திய ரயில்வேயில் அதிக வருவாய் ஈட்டும் மண்டலங்களில் ஒன்றாக தெற்கு ரயில்வே இருந்து வருகிறது.
அதன் படி தெற்கு ரயில்வேயில் உள்ள 700 நிலையங்களில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் கடந்த 2023-24-ம் நிதி ஆண்டில் ஆயிரத்து 215 கோடி ரூபாய் வருவாயாக ஈட்டி முதலிடம் பிடித்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.