ராமநாதபுரத்தில் கோடை வெப்பத்தை தணிக்க கோயில் யானை ராமலெட்சுமி நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தது.
இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ராமலட்சுமி என்ற யானை உள்ளது.
இந்த கோயில் யானைக்காக வடக்கு வாசலில் உள்ள நந்தவனத்தில் 15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் தவித்து வந்த கோயில் யானை சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போட்டது.