திருப்பூரில் பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி நகை பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
காரணம்பேட்டையில் சரண்யா என்பவர் தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வீட்டுக்கு வந்த இருவர், மிளகாய் பொடியை முகத்தில் தூவி கட்டிப்போட்டுவிட்டு மூன்று சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து விசாரித்து வந்த பல்லடம் போலீசார், இச்சிப்பட்டியை சேர்ந்த லோகராஜ் மற்றும் தாமரைக்கண்ணன் ஆகியோரை கைது செய்து நகையை மீட்டனர். இதனையடுத்து இருவரும் திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.