கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டு மற்றும் அதிரடிப்படையினர் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இந்த தொகுதியில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்பதும், கடந்த சில நாட்களுக்கு முன்பு, பொது மக்கள் முன்பு துப்பாக்கியுடன் தோன்றிய மாவோயிஸ்டுகள் தேர்தலில் வாக்களிக்க கூடாது என மிரட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.