திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் அருகே நிலத்தை எழுதித் தராததால் விவசாயி குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த அவலம் அரங்கேறியுள்ளது.
பால் கட்டளை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் விவசாயி நாராயணன். இவர் தனக்கு சொந்தமான சுமார் இரண்டரை ஏக்கர் நிலத்தை ஊருக்கு தராததன் காரணமாக, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குடும்பத்துடன் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவரது குழந்தைகளிடம் கூட பிறர் பேச முன்வருவதில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட நாராயணன், மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் அளித்தார்.