புதுச்சேரியில் உலக மலேரியா தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
உலக மலேரியா தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி சுகாதார துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் மலேரியா கொசு உற்பத்தியை ஒழிப்பதற்கான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சுகாதாரத் துறை ஊழியர்கள், செவிலியர்கள், கல்லூரி மாணவர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.