ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தரக்கோரி 200-க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பட்ரமங்கலம் கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டியலினத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள அரசுக்கு சொந்தமான ஆறு ஏக்கர் நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அந்த இடத்தில் எரிமேடை மயானம் அமைக்கவும் அந்த நபர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆதித்தமிழர் பேரவை கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர், நிலத்தை மீட்டுத் தரக்கோரி சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.