நேரில் ஆஜராவதில் இருந்து பாபா ராம் தேவ்வுக்கு விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அலோபதி மருந்துகள் குறித்து, பதஞ்சலி நிறுவனம் சார்பில் பாபா ராம் தேவ் தவறான விளம்பரம் வெளியிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பாக பாபா ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதோடு பாபா ராம் தேவ் நேரிலும் ஆஜராகவும் உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் பாபா ராம்தேவ் நேரில் ஆஜரானதோடு தனது செயலுக்கு மன்னிப்பும் கோரினார்.
ஆனால், இதனை ஏற்றுக் கொள்ளாத உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பாபா ராம்தேவுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு “நாளிதழ்களில் பெரிய அளவில் பொது மன்னிப்பு வெளியிட வேண்டும்” என்றும் அதிரடியாக உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு நிலையில் பாபா ராம் தேவ் மற்றும் பாலகிருஷ்ணன் ஆச்சார்யா ஆகியோர் நேரில் ஆஜராகி, தங்களது செயலுக்கு மீண்டும் மன்னிப்பு கேட்டனர்.
இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் பாபா ராம் தேவ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.