திமுக ஆட்சியில் சமத்துவமும் இல்லை! சமூக நீதியும் இல்லை! - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
Sep 4, 2025, 05:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சியில் சமத்துவமும் இல்லை! சமூக நீதியும் இல்லை! – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Apr 30, 2024, 06:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை மாவட்டம், சங்கம்விடுதி கிராம மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது குறித்து தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என தேசிய மகளிரணி தலைவரும், பா.ஜ.க. கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 2023 நவம்பரில் காஞ்சிபுரம் மாவட்டம், சிறுபினாயூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருவந்தவார் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டதாக எழுந்த புகார், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து முழுமையாக ஆய்வு நடத்துவதற்குள், அவசர அவசரமாக ஜேசிபி இயந்திரம் மூலம் குடிநீர் தொட்டி இடித்து அகற்றப்பட்டது. பள்ளி குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்படவில்லை என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தார்.

கடந்த மார்ச் மாதம், மகளிர் நலத்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதக்கமும் சான்றிதழும் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள சங்கம்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட குருவாண்டான் தெருவில், பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்து பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. ஆனால், இப்போது மாட்டுச் சாணம் கலக்கப்படவில்லை என்று புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்திருக்கிறது.

இன்னும் சில மாதங்களில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் பதக்கமும், பாராட்டும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாமா?
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில், பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேன்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட, மனித இனமே வெட்கித் தலைகுனிய வேண்டிய சம்பவம் நடந்து 15 மாதங்களுக்கு மேலாகிறது.

ஆனாலும், இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்தக் கொடூரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முடியாத திமுக அரசு, அதுபோல நடக்கும் சம்பவங்களை மூடி மறைத்து வருகிறது.

எதற்கெடுத்தாலும் சமத்துவம், சமூக நீதி என்று தான் திமுக அரசு பேசுகிறது. ஆனால், உண்மையிலேயே திமுக ஆட்சியில் சமத்துவமும் இல்லை. சமூக நீதியும் இல்லை. குடும்ப ஆட்சியும், ஊழலும் இருக்கும் இடத்தில் சமத்துவமும் இருக்காது. சமூக நீதியும் இருக்க முடியாது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை விமர்சிப்பவர்களை கைது செய்வதற்கும், எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கும் மட்டுமே தமிழக காவல்துறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வேங்கைவயல் சம்பவத்தில் திமுக அரசின் செயலற்றத்தன்மை வெளிப்பட்டுள்ளதால், புதுக்கோட்டை மாவட்டம் சங்கம்விடுதி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசு முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Vanathi Srinivasan
ShareTweetSendShare
Previous Post

173 கிலோ போதைப்பொருள், மீன்பிடி படகு பறிமுதல்: இருவர் கைது!

Next Post

தமிழக அரசின் தணிக்கை அறிக்கை ஆளுநரிடம் ஒப்படைப்பு!

Related News

எந்தெந்த பொருட்கள், சேவைக்கு வரி விலக்கு?

மேற்குலக நாடுகளே இருக்காது : அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி : புயலால் சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை!

ஆனந்த் மகேந்திராவின் கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்த இணையவாசிகள்!

லண்டன் : விபத்துக்குள்ளான இரண்டு அடுக்கு பேருந்து – பலர் காயம்!

ஜிஎஸ்டி சீர் திருத்தம் உள்நாட்டு உற்பத்தியில் முதலீட்டை ஊக்குவிக்கும் : Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு

Load More

அண்மைச் செய்திகள்

கடலூர் : மழைநீர் வடிகால் அமைத்ததாக கூறி ரூ.13 லட்சம் மோசடி!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை!

ஜப்பானில் விண்வெளி வீரர் என கூறி மூதாட்டியை ஏமாற்றிய இளைஞர்!

ஜம்மு-காஷ்மீர் : வெள்ள பாதிப்பு குறித்து ட்ரோனில் ஆய்வு செய்த ராணுவம்!

கொடிய நோயால் அவதிப்படுகிறாரா ட்ரம்ப்? : ISCHEMIC STROKE குறித்து அலசி ஆராயும் அமெரிக்கர்கள்!

திருச்சி : தலையை துண்டித்து இளைஞர் படுகொலை!

50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வீட்டில் அடைத்துவிட்டு சென்ற வாடகைதாரர்!

பனியன் குடோனில் தீ விபத்து – தீயை போராடி அணைத்த வீரர்கள்!

அமெரிக்க மிரட்டலை மதிக்காத இந்தியா!

ஜிஎஸ்டி சீர்திருத்தம் : விலை குறையும் பொருட்களின் பட்டியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies