தலைமை ஏர் ஆபீசர் கமாண்டிங் பயிற்சி கமாண்டராக ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் இன்று பொறுப்பேற்றார்.
ஏர் மார்ஷல் என் கபூர் 1986, டிசம்பர் 6 அன்று இந்திய விமானப்படையில் நியமிக்கப்பட்டார். அவர் தேசிய பாதுகாப்பு அகாடமி, பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். அவர் 3,400 மணி நேரத்திற்கும் அதிகமாக பறந்த அனுபவம் கொண்டவர்.
அவரது பணிக்காலத்தில் பல பொறுப்புகளை வகித்துள்ளார். மத்தியப் பிரிவின் போர் படைப்பிரிவில் கமாண்டராகவும், மேற்குப் பகுதியில் நிலைய தளபதியாகவும், முதன்மை விமான தளத்தின் விமான கமாண்டராகவும் அவர் செயல்பட்டுள்ளார்.
தற்போதைய நியமனத்தை ஏற்பதற்கு முன், விமான தலைமையகத்தில் விமானப் பொறுப்பு அதிகாரியாக அவர் பணியாற்றினார்.
அவரது பாராட்டத்தக்க சேவையை அங்கீகரிக்கும் விதமாக, 2008-ல் வாயு சேனா பதக்கமும், 2022-ல் அதி விசிஷ்ட் சேவா பதக்கமும் வழங்கப்பட்டது.