ஆந்திராவில் சொத்துக்காக வளர்ப்புத் தாயை கரெண்ட் ஷாக் கொடுத்து சித்திரவதை செய்து கொலை செய்த கொடூர வளர்ப்பு மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்நாடு மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமிபாய்.இவர் தனது கணவரின் மற்றொரு மனைவியின் மகனான நாயக்கை தத்து எடுத்து சிறு வயது முதல் வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டை தன்னுடைய பெயருக்கு எழுதி கொடுக்க மறுத்த வளர்ப்பு தாய் லட்சுமி பாய்க்கு, கரண்ட் ஷாக் கொடுத்து சித்திரவதை செய்ததுடன், ஒரு கட்டத்தில் இரும்பு ராடால் அடித்து நாயக் கொலை செய்துள்ளார்.
இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார், கொலை செய்த வளர்ப்பு மகன் நாயக்கை கைது செய்தனர்.