தஞ்சாவூரில் மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணத்தில் உள்ள திருப்பனந்தாள், பந்தநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மும்முனை மின்சாரம் முறையாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் விவசாய பணிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மரத்துறை என்னும் இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
100-க்கு மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.