அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே குடிநீர் விநியோகிக்கக்கோரி கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவில் வாழ்க்கை கிராமம் காலன தெருவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு சரிவர குடிநீர் விநியோகிக்கப்படாததால், சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தர்ம சமுத்திரம் சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தங்களுக்கு முறையாக குடிநீர் விநியோகிக்கக் கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.