சாயல்குடி பத்திரகாளி அம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் உற்சவ கொடை விழா கோலாகலமாக நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் உற்சவ கொடை விழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக மஞ்சள் நீர் மற்றும் பால்குடங்கள் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.