தமது மூன்றாவது பதவி காலத்தில், முதல் 100 நாட்களில் செய்ய வேண்டிய பணிகளை ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
அப்போது பேசிய அவர்,
“அரசியல் அமைப்பை மாற்றுவார்கள், இட ஒதுக்கீடு ரத்து செய்வார்கள் என பாஜக குறித்து பொய் பிரச்சாரம் செய்தார்கள் அது எடுபடாமல் போகவே, இப்போது போலி வீடியோகளை பரப்ப ஆரம்பித்துள்ளனர்” என காங்கிரஸ் மீது குற்றம் சாட்டினார்.
“பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களில்கூட காங்கிரஸ் போட்டியிடவில்லை. அப்படி இருக்கையில், காங்கிரஸ் எப்படி ஆட்சி அமைக்கும்” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இப்போது போலேவே, கடந்த 2019 -ஆம் ஆண்டிலும் பாஜக வெற்றி பெறாது என்றனர். ஆனால், மக்கள் வெற்றியை கொடுத்தார்கள். அதுபோலவே, இப்போதும் மகத்தான வெற்றி கொடுப்பார்கள்” என நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.