கோடை வெப்பம் காரணமாக தெலங்கானா மாநிலத்தின் சில தொகுதிகளில் வாக்குப்பதிவு நேரத்தை தேர்தல் ஆணையம் மாற்றியமைத்துள்ளது.
தெலுங்கானாவில் மொத்தமுள்ள 17 தொகுதிகளுக்கும் வரும் 13ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெலுங்கானா மாநில தலைமை தேர்தல் அதிகாரியின் பரிந்துரையை ஏற்றும், வாக்காளர்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்காகவும் சில தொகுதிகளில் வாக்குப்பதிவு நேரம் மாற்றி அமைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
காலை 7 மணி முதல் மாலை 5 மணிக்கு பதிலாக காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.