வேலூரில் 43.7° செல்சியஸ், ஈரோட்டில் 43.6° செல்சியஸ், திருச்சியில் 43.1° செல்சியஸ், திருத்தணியில் 42.5° செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 10 இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை 40° – 42° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதில் செல்சியஸ் இயல்பை விட +7.2° செல்சியஸ் அதிகம் பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை வேலூரில் 43.7° செல்சியஸ், ஈரோட்டில் 43.6° செல்சியஸ், திருச்சியில் 43.1° செல்சியஸ், திருத்தணியில் 42.5° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
தர்மபுரி & சேலத்தில் 41.5° செல்சியஸ், மதுரை (நகரம் & விமான நிலையம்) மற்றும் திருப்பத்தூரில் 41.4° செல்சியஸ், நாமக்கல் & தஞ்சாவூரில் 41.0° செல்சியஸ், சென்னை மீனம்பாக்கத்தில் 40.7° செல்சியஸ், கடலூரில் 40.2° செல்சியஸ் மற்றும் பாளையம்கோட்டையில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 40.7° செல்சியஸ் (+.3.5° செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 39.0° செல்சியஸ் (+2.9° செல்சியஸ்) பதிவாகியுள்ளது.
02.05.2024 முதல் 06.05.2024 வரை: அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 02.05.2024 & 03.03.2024: வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
04.05.2024 முதல் 06.05.2024 வரை: வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.