ராமநாதபுரம் அருகே மான்களை வேட்டையாடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
பேராவூர் பகுதியில் வனச்சரக அலுவலர் நித்திய கல்யாணி தலைமையில் வன அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது உதயகுமார் என்பவர் சந்தேகத்திற்கிடமாக சென்று கொண்டிருந்தார். அப்போது இவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 2 புள்ளிமான்களை வேட்டையாடியது தெரியவந்தது.
பின்னர் இவரை கைது செய்த அதிகாரிகள் 2 மான்களின் தலை மற்றும் கால்கள், தோல் உள்ளிட்டவை பறிமுதல் செய்து, தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.