நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே சரக்கு லாரி மீது இருச்சக்கர வாகனம் மோதிய விபத்தில் பெண் தலைமை காவலர் உயிரிழந்துள்ளார்.
மெட்டாலா பகுதியை சேர்ந்தவர் அமுதா, தலைமை காவலரான இவர், திருச்செங்கோட்டில் உள்ள வாக்குப்பெட்டி பாதுகாப்பு மையத்தில் பணி புரிந்துவந்துள்ளார்.
வழக்கம் போல் பணி முடித்துவிட்டு அமுதா வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அணைப்பாளையம் பகுதிக்கு சென்றுக்கொண்டிருக்கும் போது எதிரே வந்த சரக்கு வாகனம் அமுதா மீது மோதியதில் இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு கூராய்விற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.