டெல்லி மகளிர் ஆணையத்தில் 223 ஊழியர்களை நீக்கம் செய்து துணை நிலை ஆளுநர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி மகளிர் ஆணையத்தில் விதிகளை மீறி ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால், டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக இருந்த காலத்தில் விதிகளை மீறி நியமனங்கள் செய்ததாக தெரிகிறது.
இதுதொடர்பாக டெல்லி துணை நிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 40 ஊழியர்களை நியமிக்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் ஒப்புதல் இன்றி 223 புதிய உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.