மத்திய அமைச்சரும், ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான தர்மேந்திர பிரதான் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
முன்னதாக பேரணியாக சென்ற அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஒடிசாவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறுகிறது. மே 13 ஆம் முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.