காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை ஒரு போதும் ரேபரேலி மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என உத்தரப்பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரேபரேலி மற்றும் அமேதியில் பாஜக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என தெரிவித்தார்.
முதலில் அமேதியில் இருந்து வயநாடு சென்ற ராகுல் காந்தி, தற்போது ரேபரேலிக்கு வந்துள்ளதாகவும், ஆனால் ரேபரேலியில் அவர் வெற்றி பெறுவது கடினம் என்றும் அவர் கூறினார்.