கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் கிராமத்தில் அமைந்துள்ள பச்சையம்மன் மற்றும் சப்த முனீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட 4 கோயில்களின் குடமுழுக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது.
நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்றதைத் தொடர்ந்து, கோவில்களின் கோபுர கலசங்களில் வேத மந்திரங்கள் முழங்க புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு தீயணைப்பு துறை வாகனம் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.