தோல்வி பயம் காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஒவ்வொரு தொகுதியாக மாறி வருவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
தர்மஷாலாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
எதற்கும் அஞ்ச வேண்டாம் என அடிக்கடி கூறும் ராகுல் காந்தி, தோல்வி பயம் காரணமாக அமேதி, வயநாடு ரேபரேலி என தொகுதி மாறி வருவதாக தெரிவித்தார்.
பிரியங்கா காந்திக்கு ரேபரேலி தொகுதி ஒதுக்கப்படாதது காங்கிரஸ் கட்சிக்குள் ஏதோ குழப்பம் நிலவுவதை காட்டுவதாகவும் அவர் கூறினார்.