விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரயில்வே ஊழியரை பால்வியாபாரி தாக்கிய சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.ஆர்.எம்.யு சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பண்டிதன்பட்டி ரயில்வே கேட்டில் ஞானசேகரன் என்பவர் கேட் கீப்பராக பணியாற்றி வருகிறார்.
இவர் வழக்கம் போல் ரயில்வே கேட்டை அடைத்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த பால் வியாபாரி ராஜா என்பவர் கேட்டை திறக்கச் சொல்லி தகாத வார்த்தைகளால் ஞானசேகரனை திட்டியும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து ஞானசேகரன் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். இந்நிலையில் ரயில்வே ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஏராளமான எஸ்.ஆர்.எம்.யு சங்கத்தினர் ஸ்ரீவில்லிபுத்தூர் இருப்புப்பாதை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.