கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள தர்மராஜா கோயில் பல்லக்கு உற்சவத்தில் பூசாரி பூக்கரகம் எடுத்து அருளாசி வழங்கினார்.
டி.கொத்தப்பள்ளி கிராமத்திலுள்ள பிரசித்தி பெற்ற தர்மராஜா கோயிலின் திருவிழா கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் நிறைவு நாளான பல்லக்கு உற்சவத்தை ஒட்டி, பூசாரி பிரம்மாண்டப் பூக்கரகம் எடுத்து நடனமாடியவாறு அருளாசி வழங்கினார்.
இதில் 27 கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்று, 40-க்கும் மேற்பட்ட கிராம தேவதைகளுக்கு கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர்.