தென்காசி மாவட்டம், புளியரை அருகே முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானையால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
தமிழக – கேரள எல்லைப் பகுதியில் உள்ள புளியரை பகவதிபுரம் ரயில்நிலையம் அருகே உள்ள தோப்பில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானை பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
ஒற்றைக் காட்டு யானையை வனத்துக்குள் விரட்டும் வனத்துறையினரின் முயற்சி தோல்வியில் முடிந்ததால், அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.