ஊழல் குற்றச்சாட்டுகளை பொது வெளியில் பேசியதற்காக சவுக்கு சங்கரை திமுக அரசு கைது செய்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை செனாய் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடும், போதைப்பொருளும் தலை விரித்தாடுவதாக தெரிவித்தார். காவிரி நீரை கர்நாடகாவில் இருந்து பெறாததற்கு திமுக அரசு தான் காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
சவுக்கு சங்கரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது எனவும், ஊழல், குற்றச்சாட்டுகளை பொது வெளியில் பேசியதற்காக சவுக்கு சங்கரை திமுக அரசு கைது செய்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளின் கைக்கூலிகளாக செயல்பட்டு வருவதாகவும் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.