ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி பகுதியில், இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான வலி நிவாரண மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர் .
வலி நிவாரணி மாத்திரைகள் கடத்தப்படுவதாக வந்த தகவிலின் பேரில், குற்றப்பிரிவு போலீசார் திருப்புல்லாணி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினி வேனை சோதனை செய்ததில், 2.50 கோடி ரூபாய் மதிப்பிலான வலி நிவாரண மாத்திரைகள் கொண்டு சென்றது தெரியவந்தது.
இவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் ஸ்ரீதரன் என்வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.