உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்கிறார்.
நாடாளுமன்ற தேர்தல் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் 7ஆம் தேதி நடைபெறுகிறது, இதனையடுத்து அரசியல் தலைவர்கள் உச்ச கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி இன்று உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா மற்றும் தௌராஹ்ராவில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
இதனைத்தொடர்ந்து அயோத்தியில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பேரணியிலும் பிரதமர் பங்கேற்கிறார்.
அவரது பயணத்தின் ஒரு பகுதியாக அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்கிறார்.
இதனையடுத்து ராமர் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் வருகையை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
















