அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என.ரவி குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார்.
அயோத்தி ராமர் கோயில் குழந்தை ராமர் சிலையை கடந்த ஜனவரி 22ஆம் தேதி பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்து வைத்தார். இதனைத்தொடர்ந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அயோத்தி சென்றிருந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமது குடும்பத்தினருடன் பிரார்த்தனை செய்தார். அதேபோல் ஸ்ரீ ஹனுமான் கோயிலிலும் அவர் தரிசனம் செய்தார். புனித சரயு நதிக்கரையில் ஆரத்தி எடுத்து வழிபட்டார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
500 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளதாகவும், ராமர் கோவில் நம்பிக்கையின் சின்னம் என தெரிவித்தார்.
நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்துள்ளதாகவும், திரளான மக்கள் கூட்டத்தை பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.
நாட்டை மேம்படுத்தும் முயற்சியில் நம்மை ஒன்றிணைத்து, வலிமை தர வேண்டும் என்று ஸ்ரீராமரைப் பிரார்த்திக்கிறேன் என்றும் ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.