கோடை விடுமுறையை ஒட்டி 40க்கும் மேற்பட்ட விமானங்கள் சென்னையிலிருந்து இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோடை விடுமுறைக்காக விமானம் மூலம் வெளியூர் செல்லும் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. எனவே தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்னையிலிருந்து கூடுதலாக 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கபடுவதாக அறிவிப்பு வெளியானதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் சென்னையிலிருந்து பாரிஸ்ஸுக்கு வாரத்திற்கு 3 நாட்கள் விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக வாரத்திற்கு 5 நாட்கள் விமானங்கள் இயக்கப்படுகின்றன.