“கடந்த 10 ஆண்டு கால ஆட்சிபோல், மீண்டும் நேர்மையான ஆட்சியைக் கொடுப்போம்” என பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலம் இட்டவா மாவட்டத்தில் புந்தேல்கண்ட் எக்ஸ்பிரஸ் வே அருகே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி,
“கடந்த 10 ஆண்டுகளில் நேர்மையான ஆட்சியை கொடுத்துள்ளோம்” எனவும், “25 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்” என்றும் தெரிவித்தார்.
“நேர்மையான முறையில் மக்கள் சேவை செய்ய விரும்புகிறோம்” என்றும், “உங்கள் ஆசி இருந்தால், வரும் 5 ஆண்டு கால ஆட்சியில் 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை கொடுப்போம் ” என தெரிவித்தார்.
” பொய் மூட்டைகளை தூக்கிக் கொண்டு சிலர் வருவார்கள். அவர்களை ஓடஓட விரட்ட வேண்டும்” என வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார்.