கடல் அலையில் சிக்கி உயிரிழந்த 5 கல்லூரி மாணவர்களின் குடும்பத்திற்குப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்த திருச்சி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கன்னியாகுமரி அருகே, கடலில் குளித்த மருத்துவக் கல்வி கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர், கடலில் மூழ்கி பலியாகியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமுமளிக்கிறது.
கன்னியாகுமரி அருகே, கடலில் குளித்த மருத்துவக் கல்வி கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர், கடலில் மூழ்கி பலியாகியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமுமளிக்கிறது. அவர்கள் அனைவரின் குடும்பத்தினருக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
பொதுமக்கள் அனைவருமே,…
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) May 6, 2024
அவர்கள் அனைவரின் குடும்பத்தினருக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் பொதுமக்கள் அனைவருமே, நீர்நிலைகளில் மிகக் கவனமாக இருக்கவும், தகுந்த பாதுகாப்பின்றி, நீர்நிலைகளில் இறங்க முற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.