சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க ஐந்து நாட்கள் தேவைப்படுகிறது என நீதிமன்றத்தில் கோவை சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை கோவை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து, நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். இதுகுறித்து விசாரித்த நீதிபதி கோபாலகிருஷ்ணன் சவுக்கு சங்கரை வரும் 17-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து 5 நாட்கள் விசாரிக்கை அனுமதிக்கோரி சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.