கொடைக்கானலில் வெப்பம் தணிந்து குளுகுளு சீதோஷ்ண நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்பொழுது கோடை சீசன் தொ்டங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் வெய்யில் சுட்டெரித்து வரும் நிலையில் கொடைக்கானலில் மதியம் திடீரென நட்சத்திர ஏரி பகுதியில் கோடை மழை சுமார் ஒரு மணிநேரம் வெளுத்து வாங்கியது.
படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்து கொண்டே சவாரி செய்து மகிழ்ந்தனர்.
மேலும் இந்த கோடை மழையால் வறண்டு இருந்த பாம்பார் நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரித்தது. இதில் சுற்றுலா பயணிகள் இறங்கி மகிழ்ந்தனர்.
கொடைக்கானலில் மாலையில் குளிர்ச்சி நிலவுவதால் வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.