பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான 3ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிப்பதற்காக பிரதமர் மோடி சென்றார்.
அப்போது அங்கு திரண்டிருந்த வாக்காளார்கள் கைகளை அசைத்து பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
பின்னர் பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஒன்றாக நடந்து சென்றனர். அப்போது வாக்குப்பதிவு செய்ததை உறுதி செய்யும் வகையில் தனது விரலை உயர்த்தி காட்டி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை பிரதமர் வலியுறுத்தினார்.
மேலும் அங்கு நின்றிருந்த சிறுவர்களுக்கு பிரதமர் மோடி ஆட்டோகிராப் போட்டு அவர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் குழந்தை ஒன்றையும் அவர் கொஞ்சி மகிழ்ந்தார்.
Urging all those who are voting in today’s phase to vote in record numbers. Their active participation will certainly make the elections more vibrant.
— Narendra Modi (@narendramodi) May 7, 2024
முன்னதாக பிரதமர் விடுத்துள்ள எக்ஸ் தளபதிவில், வாக்காளர்கள் சாதனை எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். வாக்களிக்கும் அனைவரும் தங்கள் உரிமைகளை பதிவு செய்ய வேண்டும் என்றும், அவர்களின் சுறுசுறுப்பான பங்கேற்பு தேர்தலை மேலும் விறுவிறுப்பாக மாற்றும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.