ஜெர்மனியின் ராட் வைல் பகுதியை சேர்ந்ததால், இந்த வகை நாய்களுக்கு ராட் வெய்லர் என்ற பெயர் வந்துள்ளது. இந்த நாய் குறித்து இதில் காண்போம்…
ராட் வெய்லர் வகை நாய்கள் 56 முதல் 69 செமீ வரை வளரக்கூடியவை.
ராட் வெய்லர் வகை நாய்களின் எடை 40 முதல் 50 கிலோ வரை இருக்கும்.
ராட்வெய்லர் நாய்களின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள்.
19-ஆம் நூற்றாண்டில் கால்நடைகளை மேய்ப்பது, வேட்டைக்கு செல்வது போன்ற வேலைகளுக்கு ராட்வெய்லர்கள் பயன்படுத்தப்பட்டது.
20 – ஆம் நூற்றாண்டில் காவல்துறை மற்றும் ராணுவத்தில் ராட்வெய்லர்கள் பயன்படுத்தப்பட்டன.
காலப்போக்கில் ராட்வெய்லர்கள் பாதுகாப்பிற்கு மட்டுமல்லாமல் செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்பட்டன.
மரபு வழியில் புத்திசாலியாகவும் வலிமையானதாகவும் தைரியமானதாகவும் ராட் வெய்லர்கள் பார்க்கப்படுகிறது.
சரியான நேரத்தில் உணவும், பயிற்சியும் கொடுத்தால் மட்டுமே ராட் வெய்லர்களை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
பயிற்சி கொடுப்பதைத் தவறவிட்டால் இந்த வகை நாய்கள் வளர்ப்பவரையே தாக்கக்கூடியவை.
பிறவியிலேயே ஆக்ரோஷ குணம் கொண்டுள்ளதால் அறிமுகமில்லாதவர்கள் ராட்வெய்லர்களுக்கு எப்போதும் எதிரிதான்.
ராட் வெய்லர்கள் அளவுக்கு அதிகமான பசியில் இருக்கும்போது ஆக்ரோஷமாக மாறிவிடும்.
வீட்டின் பாதுகாவலனாக பார்க்கப்படும் ராட் வெய்லர்கள் செல்லப்பிராணியாக வளர்க்க உகந்தவை அல்ல.
ஆபத்தும், ஆக்ரோஷமும் கொண்டுள்ள ராட்வெய்லர்களை வீடுகளில் வளர்க்க தடை செய்தால் மட்டுமே மனிதர்கள் மீதான தாக்குதலை தடுக்கமுடியும்.