திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றி சவுடு மண் எடுப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காட்டூர், தத்தமஞ்சி ஏரிகளை இணைத்து, 49 புள்ளி 36 கோடி மதிப்பீட்டில் 350 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கம் அரசு சார்பில் அமைக்கப்பட்டது.
இந்த பகுதியில் சட்டவிரோதமாக சவுடு மண் எடுப்பதால், நிலத்தடி நீர் உவர் நீராக மாறி, தங்கள் பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தங்கள் பகுதியில் மண் குவாரி செயல்படுத்த கூடாது என வலியுறுத்தி வட்டாசியர் முதல் மாவட்ட ஆட்சியர வரை கோரிக்கை மனு அளித்துள்ளனர்.